LATEST NEWS
நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்காங்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டண். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சொல்லாமலே , விரலுக்கேத்த வீக்கம் மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவருக்கு இன்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் அடிக்கடி ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தலை காட்டி வருகிறார்.
இவருக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜோவிதா பூவே உனக்காக மற்றும் அருவி போன்ற பல சன் டிவி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
