LATEST NEWS
1 இல்ல 2 இல்ல கோடிக்கணக்கில் மதிப்பு.. ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தை பார்த்து வியந்த முகநூல் நிறுவனரின் மனைவி.. வைரலாகும் வீடியோ..!!
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ரித்திகா மெர்சண்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக மார்ச் ஒன்றாம் தேதி முதல் பிரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானியின் சொந்த ஊரில் நடைபெற்றது.
தொடர்ந்து மூன்று நாட்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள், திரைப்படங்கள், மருத்துவத்துறை நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர். முதல் நாளில் பாடகி ரிஹானா இசை நிகழ்ச்சி நடத்தினார். இதனையடுத்து இரண்டாம் நாள் ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் தங்கி இருக்கும் விருந்தினர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரெசில்லா சானுடன் ஆனந்த் அம்பானி உரையாற்றினார். ஆனந்த் அம்பானி கட்டியிருந்த கைக்கடிகாரம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி கேட்ட பிரெசில்லா கைக்கடிகாரம் அற்புதமாக இருப்பதாகவும், கவர்ந்திழுப்பதாகவும் கூறினார்.
மேலும் மார்க் இதற்கு முன்பு கை கடிகாரங்கள் மீது எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் உங்கள் கைகடிகாரத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது என கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனந்த் அம்பானி ரிச்சர்ட் மில் என்ற நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை கட்டி இருந்தார். அதன் மதிப்பு சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Mark Zuckerberg & his wife Priscilla was surprised to see Indian Billionaire’s Son Anant Ambani’s watch. Anant was seen carrying beautiful Richard Mille worth INR 14 crore/$1.6 Million. #AmbaniPreWedding #AnantAmbani #MarkZuckerberg #Radhika pic.twitter.com/rQdshIjXWj
— ITS GONE VIRAL (@embrrrrrrrrr) March 3, 2024
