தமிழ் சினிமா நடிகைகளின் மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா நடிகைகளின் மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். 70களில் தொடங்கி இன்று வரை சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளின் மகன்கள் யார் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தமிழ் சினிமாவில் கலக்கும் நடிகைகளின் மகன்கள் புகைப்படம் இதோ.

நடிகை ராதிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா. 90களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் சரத்குமாரை மறுமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரின் பெயர் ராகுல். சிங்கப்பூர் கல்லூரியில் படித்து வந்த ராகுல் பட்டம் பெற்றுள்ளார். இதோ அவரின் புகைப்படம்.

 

Advertisement

நடிகை அம்பிகா:

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகை தான் அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் கிட்டத்தட்ட ஜோடி போட்டவர். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராம் கேசவ் என்ற மகன் உள்ளார். இவர் தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

நடிகை ராதா:

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடிக்க வந்த ஆறு வருடங்களில் 100 திரைப்படங்களில் நடித்ததுடன் 10 ஆண்டுகளில் 162 திரைப்படங்களில் நடித்தவர். இது இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனை. சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திருமணம் செய்து கொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிசியானார். தற்போது சில தொலைக்காட்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். மகள்கள் சினிமா பக்கம் வந்துள்ள நிலையில் ராதாவின் மகன் இதுவரை சினிமா பக்கம் வரவில்லை.

Advertisement

நடிகை அமலா:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார். நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகன்தான் நாக சைதன்யா. இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் பிறந்தவர் தான் அகில். தற்போது அமலா மகன் அகிலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ஸ்ரீபிரியா:

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஸ்ரீபிரியா. தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர் மகனின் புகைப்படம் இதோ.

Advertisement

நடிகை நளினி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நளினி நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1987 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் அவரின் மகள் அருணாவை பலரும் பார்த்திருப்போம். ராமராஜன் மற்றும் நளினியின் மகன் அருனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

Advertisement

நடிகை ரோஜா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் ரோஜா. இவர் ஆந்திராவில் அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ ரோஜாவின் மகன் புகைப்படம்.

Advertisement

நடிகை சினேகா:

தமிழ் சினிமாவில் இன்றும் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டு திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது சினேகா பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இதோ சினேகாவின் மகன் புகைப்படம்.

Advertisement

நடிகை ஜோதிகா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது ஜோதிகா தனது மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை சிம்ரன்:

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சிம்ரன். பல வருடங்களுக்குப் பிறகு மாதவனின் ராக்கெட்டரி நம்பி விளைவு திரைப்படத்தில் ரி என்ட்ரி கொடுத்த இவர் தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இவர் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

நடிகை ரம்பா:

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை ரம்பா. தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

Advertisement

நடிகை கஸ்தூரி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை கஸ்தூரி. 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். தற்போது 47 வயதான கஸ்தூரி குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ அவர் மகனின் புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in