சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சிறிது நாட்களிலேயே அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகினார்.
அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.
அவ்வகையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கினார்.
பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை தனது கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பின்னர் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார் மணிமேகலை.
இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.
அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மணிமேகலை தனது கணவருடன் சொந்தமாக ஒரு youtube சேனலையும் நடத்தி வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட் செய்து வருவார்கள்.
தற்போது அவரின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.