CINEMA
வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்…. என் பொருளை மீட்டு குடுங்க…. மனைவி மீது புகார் கொடுத்த ஜெயம் ரவி….!!
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்த செய்தி தினமும் எதாவது வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மனைவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கார், பொருட்களை மீட்டு தரவும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இது அவருடைய வீடு எனவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்றும் மனைவி ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை ஜெயம் ரவியிடம் தெரிவித்த போலீசார், சட்ட ரீதியாக எதிர்கொள்ள அறிவுரை கொடுத்துள்ளனர்.