CINEMA
உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இப்படி இருப்பாரா…? அஜித் குறித்து ஜீவா ரவி பதிவு…!!
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும். படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவா ரவி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த மனிதர் அஜித். உச்சத்தில் இருக்கும் ஒருவர் இவ்வளவு எளிமையாக இருப்பதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது .எளிமையான, பணிவான, மிகவும் அன்பானவராக நீங்கள் நீங்களாக இருப்பதற்காக லவ் யூ அஜித் சார் என்று பதிவிட்டுள்ளார்.