LATEST NEWS
குஷி படத்தில் ஜோதிகா இடுப்பு சீன் எடுக்க எனக்கு இத்தனை நாள் ஆச்சு… முதல்முறையாக மனம் திறந்து சீக்ரெட்டை சொன்ன எஸ்.ஜே சூர்யா..!!
தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வாலி மற்றும் குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.
அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குஷி திரைப்படத்தில் ஏராளமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் குஷி திரைப்படத்தில் பலரின் ஃபேவரிட் சீனாக அமைந்த ஜோதிகாவின் இடுப்பு சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.
அதில், குஷி திரைப்படத்தில் அந்த இடுப்பு சீனை எடுப்பதற்கு மூன்று நாட்கள் ஆகியது. விமானம் ஒன்று போக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவ குளோசப் ஷாட் எடுக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறானே என பலரும் திட்டினார்கள். ஆனால் நான் நினைத்தபடி தான் அந்த சீனை எடுத்தேன். அந்த பொறுமையும் உழைப்பும் தான் இன்று வரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.