LATEST NEWS
“சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க வேண்டாம்”… இல்ல எனக்கு மீனா தான் வேணும்னு அடம் பிடித்த பிரபல நடிகர்… பல வருடம் கழித்து அவிழ்ந்த உண்மை..!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்தான் நடிகை மீனா. இவர் 1982 ஆம் ஆண்டு சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு புதிய கீதை என்ற தமிழ் திரைப்படம் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது மீனா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டு ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மீனாவின் 40 வருட பிறை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக பிரபல youtube சேனல் ஒன்று மீனானா பதிவு என்ற நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் மீனாவுடன் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் நடித்த ராஜ்கிரன் மேடையில் பேசும்போது, என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு கதாநாயகி தேடிக் கொண்டிருந்தபோது ஒரு பத்திரிக்கையில் மீனாவின் புகைப்படம் இருந்தது.
அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்த பொண்ணு படத்தின் கதாநாயகிக்கு பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் நான் கூறினேன். அந்தப் பொண்ணு யாருன்னு விசாரிச்சிட்டு பேசிட்டு வாங்க என கூறிய போது உடனே கஸ்தூரிராஜா என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க இந்த பொண்ணு எப்படி சார் என்று என்னிடம் கூறினார். உடனே நான் அந்த சோலையம்மா கதாபாத்திரத்திற்கு பயந்த சுபாவம் மீனாவிற்கு அற்புதமாக பொருந்தும் நீங்கள் மீனாவிடம் பேசுங்கள் என்று கூறினேன். அந்த திரைப்படம் வெற்றி பெற்றதற்கு மீனா கதாபாத்திரம் தான் காரணம் என்று ராஜ்கிரன் பேசியுள்ளார்.