69 ஆவது தேசிய திரைப்பட விருது: “கடைசி விவசாயி” படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

69 ஆவது தேசிய திரைப்பட விருது: “கடைசி விவசாயி” படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு…!!!

Published

on

ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து அறிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதனால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரிய சிறந்த படமாக கடைசி விவசாயி என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement