LATEST NEWS
கவர்னர் கையில் டாக்டர் பட்டம் பெற்ற ஹிப் ஹாப் ஆதி… வேற லெவல் Moment.. வாழ்த்தும் ரசிகர்கள்..!!

பொதுவாக சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் நுழைந்து இன்று நடிகராக உள்ளவர்கள் பலரும் உள்ளனர். அதாவது ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக மாறியுள்ளனர். அந்த வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் தான் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ் சினிமாவிற்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார்.
அதற்கு முன்பு வரை இவர் நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அனிருத் ஹிப்ஹாப் பாதையை வணக்கம் சென்னை என்ற படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டார் என்ற பாட்டு மூலம் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இயக்குனர் சுந்தர்.சி யின் ஆம்பள திரைப்படத்தில் பாடுவதற்கு ஆதிக்கு வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் தனி ஒருவன்,இமைக்கா நொடிகள் மற்றும் அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆதி பாடியுள்ளார். மேலும் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இன்று தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் இசை தொடர்பான ஆய்வுக்காக பிஹெச்டி முடித்தவர்களுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதில் சுதந்திரமான இசை கலைஞர்களுக்கான தொழில் முனைவு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகள் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆய்வு செய்து தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் டாக்டர் பட்டத்தை வழங்கிய நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.