CINEMA
69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு… இதில் சிறந்த நடிகர்/சிறந்த திரைப்படம் யாருக்கு கிடைக்கும்..? உங்கள் கணிப்பு..??

ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட உள்ளது. தமிழில் தனுஷின் கர்ணன், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய் பீம், சமுத்திரகனியின் வினோதய சித்தம் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக கர்ணன், ஜெய் பீம் மற்றும் சார் பட்டா பரம்பரையாகிய திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து 68 வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்ற நிலையில் இந்த முறை ஜெய் பீம் திரைப்படத்திற்காக அந்த விருதை அவர் மீண்டும் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தவிர தனுஷ், ஆர்யா மற்றும் சிம்பு ஆகிய வரும் இந்த போட்டியில் உள்ளனர்.
மேலும் சிறந்த பின்னணி இசைக்காக இசை அமைப்பாளர் அனிருத்துக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறந்த இயக்குனர்களுக்கான போட்டியிலும் ஞானவேல், மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் உள்ளதால் கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது.