LATEST NEWS
லோகேஷ் கனகராஜ் உடன்… படப்பிடிப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்ட … இரு பிக் பாஸ் போட்டியாளர்கள்…!
தமிழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இப்படமானது கடந்த 19ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் திரைக்கு வந்த முதல் வாரத்திலேயே 500 கோடி வசூல் செய்தது. இதுவே விஜய் நடித்த படங்களில் முதல் வாரத்தில் அதிகமாக வசூல் செய்த படமாக கருதப்படுகிறது. மேலும் திரை அரங்குகளில் லாபம் தந்துள்ளது எனவும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் உடன் நமது பிக் பாஸ் பிரபலங்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இவ்வாறு வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை, பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட ஜனனி மற்றும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கு பெற்றுள்ள மாயாவும் தான்.
இந்த படத்தில் விஜய் வைத்திருக்கும் காபி ஷாப்பில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக ஜனனியும், LCU கனெக்ட் கதாபாத்திரத்தில் மாயாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டதன் காரணமாக இது வைரலாகி வருகிறது.