பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில்… ஏற்பட்ட உயிரிழப்பு… சோகத்தில் மிதக்கும் குடும்பம்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில்… ஏற்பட்ட உயிரிழப்பு… சோகத்தில் மிதக்கும் குடும்பம்…!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி, பிரபலம் அடைந்துள்ளனர். இப்படி பிரபலமானவர்களுள் ஒருவர்தான் மாடலிங்க் துறையில் கலக்கிக் கொண்டிருந்த அக்ஷரா ரெட்டி.  இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 5ல்  கலந்து கொண்டார். அப்பொழுது அக்சரா- விற்கும்  இதில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளருமான வருணுக்கும் இடையே காதல் நிலவுவதாக கருத்துக்கள் வெளிவந்தன.

 

Advertisement

இந்நிலையில் 80 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அக்சரா ரெட்டி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட வருணுடன் ஒன்றாக வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர்களும் நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல நல்ல நண்பர்கள் என்று அறிக்கையை வெளியிட்டனர்.அக்ஷராவின் தந்தைசுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்ற ஒரு பட்டதாரி ஆவர்.

மேலும் இவர் ஒரு தொழிலதிபர் ஆகும். இதனையடுத்து சுதாகர் ரெட்டி சில காலங்கள் முன்பே இறந்து விட்டார். இதனால் அக்ஷரா ரெட்டி தனது அம்மா மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அக்டோபர் 29 ம் தேதி அன்று இவரது அம்மாவும் காலமாகியுள்ளார். இதனால் அக்சரா தாய், தகப்பன் இன்றி தனிமையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்.

Advertisement