LATEST NEWS
80’S-ல மைக் பிடிச்சி காதல் பாட்டு பாடியவர் …மீண்டும் நாயகனாக களமிறங்கி…பிரபல நடிகையுடன் ஜோடி போட்டுள்ள மைக் மோகன்…!

தமிழில் 80’S-களின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மோகன் ஆவர். இவர் பெயரை மோகன் என்று சொல்வதை விட மைக் மோகன் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். ஏனென்றால் இவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்களில் பாடகராக நடித்துள்ளார். இவரின் படங்கள் கதைக்காக ஓடியதோ இல்லையோ, படத்தில் உள்ள பாட்டுக்காகவே நிறைய படங்கள் ஓடி உள்ளன.
இதன் பின்பு இவர் 80’S -யை 1990 -ல் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார். ஆனாலும் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்பொழுது மைக் மோகன் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ஹாரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அயலி படத்தில் ஹீரோயின் அம்மாவாக நடித்த அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அயலி படத்தில் சிறப்பாக நடத்தினால் அனுமோல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஹரா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட மைக் மோகன் மற்றும் அனுபோல் புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டிக்கொண்டு வருகிறது. இந்த மாஸ்-ஆன புகைப்படங்கள் இதோ…