CINEMA
கடின உழைப்பு வீணாகிவிட்டதே…. “கூலி”படத்தின் காட்சி இணையத்தில் லீக்…. வேதனையில் புலம்பிய லோகேஷ்….!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஸ்ருதிஹாசன், பகத்பாசில், துஷாரா விஜயன், சத்யராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் போஸ்டர் வெளியானது.
‘ராஜசேகர்’ கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இந்நிலையில் கூலி’ படத்தில் நாகர்ஜுனா நடித்துள்ள ஆக்சன் காட்சி இணையத்தில் லீக்கானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார். அதாவது பலரின் 2 மாத கடின உழைப்பு, ஏதோவொரு ரெக்கார்டிங் மூலம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, ஒரு படைப்பின் உணர்வை கெடுக்காதீர்கள் என்பதே தனது வேண்டுகோள் எனவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.