“இதெல்லாம் சேகர்பாபு ட்ரெயினிங்” எப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க பாருங்க.. மேயர் பிரியாவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன் ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதெல்லாம் சேகர்பாபு ட்ரெயினிங்” எப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க பாருங்க.. மேயர் பிரியாவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன் ..!!

Published

on

திமுக பெண் நிர்வாகி மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியபோது சென்னை மேயர் பிரியா விழுந்து விழுந்து சிரித்ததாக அமைச்சர் மரிய வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேயர் பிரியாவிற்கு நிஜமாகவே அறிவு இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை என்றும், இந்தச் செயல்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கொடுத்த ‘டிரெயினிங்’ போலத் தெரிகிறது என்றும் சாடினார்.

மேலும், 4,000 கோடி ரூபாய் விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், மேயர் பிரியா இப்போது நன்றாகச் சிரித்துக் கொள்ளட்டும் என்றும், ஆனால் தற்போது அந்தப் பெருந்தொகை விவகாரத்தில் மக்கள் தான் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டமாகக் கூறினார். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர், இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுகளை ரசித்துச் சிரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இதனிடையே, இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் தன்னைச் சமூக ஊடகங்களில் மிகவும் ஆபாசமான முறையில் விமர்சித்து வருவதாக மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in