காலையிலேயே ஷாக்..! கொலை மற்றும் போக்சோ வாக்குகளில் தொடர்புடையவர் தவெகவில் இணைந்தார்.. அரசியல் வட்டாரத்தில் கிளம்பிய புது சர்ச்சை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஷாக்..! கொலை மற்றும் போக்சோ வாக்குகளில் தொடர்புடையவர் தவெகவில் இணைந்தார்.. அரசியல் வட்டாரத்தில் கிளம்பிய புது சர்ச்சை…!!

Published

on

கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மதன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைப் போலவே, பல்வேறு நிலுவை வழக்குகளைக் கொண்ட சுரேஷ் என்பவரும் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் இணைந்து வரும் சூழலில், குற்றப்பின்னணி கொண்ட இவர்களின் இந்த வரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதனைக் கடுமையாகச் சாடியுள்ள திமுக, மேடைகளில் தங்களை “தூய சக்தி” என்று பறைசாற்றிக் கொள்ளும் தவெக, உண்மையில் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சியாக மாறி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளைத் தங்களுக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியின் தார்மீக நிலைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் திமுக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in