CRIME
நாடே அதிர்ச்சி..! “கை கால்களை கட்டி” டாக்டர் இல்லாத நேரத்தில் நர்சிங் உதவியாளர் செய்த ஆபரேஷன்… கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நேரத்தில் நர்சிங் உதவியாளர் ஒருவரே சட்டவிரோதமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததால் கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலியால் துடித்த சோனி என்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் அங்குள்ள நர்சிங் ஹோம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், அங்கிருந்த நர்சிங் உதவியாளர் அந்தப் பெண்ணை அனுமதித்ததோடு மட்டுமன்றி, அவரே ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிசேரியன் செய்யத் தொடங்கியுள்ளார்.
முறையான மருத்துவ தகுதி இல்லாத நபர் மேற்கொண்ட இந்த சட்டவிரோத அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட கடுமையான சிக்கல்களால், அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் உயிரிழந்ததைக் கண்டு பயந்துபோன அந்த உதவியாளர், உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி மருத்துவமனையின் மொட்டை மாடியில் போய் ஒளிந்துகொண்டார்.
இவ்விவகாரம் குறித்து அறிந்ததும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாடியில் ஒளிந்திருந்த நர்சிங் உதவியாளரை அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட நர்சிங் உதவியாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
