CRIME
நவராத்திரியில் நடந்த மாந்திரீகக் கொடூரம்.. மனைவியின் தலையைத் துண்டித்து காளி கோயிலில் வைத்த கணவன் – தந்தையையும் வெட்டிப் படுகொலை..!!
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மற்றும் காங்க்சா மாவட்ட எல்லைப் பகுதியில், நவராத்திரி பூஜையின்போது மாமன்னன் என்றழைக்கப்படும் மங்கள் சௌத்ரி என்ற நபர் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகக் கிரியைகளுக்காகத் தனது மனைவி மற்றும் தந்தையைத் கொடூரமாகக் கொலை செய்த இரட்டைக்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மங்களின் மனைவி ரும்பா சௌத்ரி (39) மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சௌத்ரி (60+) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபரீதச் செயலைத் தொடர்ந்து தப்பியோட முயன்ற குற்றவாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இப்பகுதி மக்களின் கூற்றுப்படி, மங்கள் சௌத்ரியின் வீட்டிற்கு மாந்திரீகம் செய்யும் நபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று மங்கள் தனது மனைவியின் தலையைத் துண்டித்து, அந்த வெட்டப்பட்ட தலையைக் காளி கோயிலில் கொண்டு போய் வைத்துள்ளார். அதன் பின்னர், தனது தந்தை ராஜேந்திர சௌத்ரியின் கழுத்தையும் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்த விசித்திர மற்றும் கொடூர வழிபாட்டு முறையே கொலைக்கு முக்கியக் காரணம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இக்கோரச் சம்பவம் பற்றித் தகவல் அறிந்ததும் பாங்குரா மாவட்ட சோனாமுகி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அந்த மாவட்ட எல்லைப் பகுதி கிராமங்களில் பெரும் சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது.
