தன்னைவிட 21 வயது இளையவரான உ.பி முதல்வர் யோகி காலில் விழுந்த ரஜினி.. வெளியான வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்… விளக்கம் கொடுத்த ரஜினி ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

தன்னைவிட 21 வயது இளையவரான உ.பி முதல்வர் யோகி காலில் விழுந்த ரஜினி.. வெளியான வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்… விளக்கம் கொடுத்த ரஜினி ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சுற்றுப்பயணம் சென்ற ரஜினி சமீபத்தில் உத்திரபிரதேசம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அந்த மாநில துணை முதல்வருடன் ரஜினி ஜெயிலர் திரைப்படம் பார்த்தார்.

பிறகு உத்திரபிரதேச மாநில முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினிக்கு தற்போது 72 வயது ஆகும் நிலையில் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி வழங்கியதை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த செயல் தமிழகத்தின் மானத்தை ரஜினிகாந்த் அடமானம் வைத்து விட்டதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வர பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரஜினி ரசிகர்கள் அவர் எதற்காக யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தின் முதல்வர் மட்டுமல்லாமல் நாத சைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மண்டபத்தின் பீடாதிபதியும் கூட. அவரைக் கண்டால் வணங்க வேண்டும் என்பதுதான் தர்மம் என்பதால் ரஜினியும் அதனை கடைப்பிடித்ததாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in