VIDEOS
உ.பி துணை முதல்வருடன் தியேட்டரில் ஒன்றாக ஜெயிலர் படம் பார்த்த ரஜினி… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு நேரில் சென்று படத்தை பார்த்து வருகிறார்கள்.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் உள்ளிட்டோருடன் அமர்ந்து நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தை இன்று கண்டு மகிழ்ந்தார். அப்போது ரஜினியுடன் அவரின் மனைவிய லதாவும் இருந்தார். தற்போது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#WATCH | Actor Rajinikanth and Uttar Pradesh Deputy Chief Minister KP Maurya watch the actor’s latest release ‘Jailer’ at a theatre in Lucknow.
(Video Source: Deputy CM KP Maurya’s Office) pic.twitter.com/mOtIuN7Jwq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 19, 2023