“என் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததே அவர்தான்”.. மாமன்னன் 50வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் மாரி செல்வராஜ் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“என் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததே அவர்தான்”.. மாமன்னன் 50வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் மாரி செல்வராஜ் ஸ்பீச்..!!

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

அந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் திடீரென மேடையில் தனது மகள் மற்றும் மகனை கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது மாரி செல்வராஜ் மகன் மற்றும் மகளின் பெயரை கேட்கும்போது ராம் சார் தான் இருவருக்கும் பெயர் வைத்ததாகவும் ஏன் எதற்கு என்று நான் கேட்கவே இல்லை என்று மாறி செல்வராஜ் கூறிய நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Cineulagam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cineulagamweb)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in