LATEST NEWS
“இவதான்யா உண்மையான சூப்பர் ஹீரோ!”… தம்பியை தாக்கிய தெரு நாய்.. அடுத்த நொடியே பறந்து வந்த அண்ணன் செய்த அசாத்திய காரியம்.. நெட்டிசன்களை மிரளவைத்த வீடியோ..!!
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தெருநாய் தாக்குதலில் இருந்து தனது தம்பியைப் பாதுகாக்க இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த நெகிழ்ச்சியான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தெருநாய் ஒன்று திடீரெனப் பாய்ந்து கடிக்க முயன்றபோது, அவனது அலறல் சத்தம் கேட்டு பதறிடித்து ஓடிவந்த அவனது அண்ணன், தனது சொந்த உயிரைப் பற்றி கவலைப்படாமல் நாய்க்கு எதிராகத் துணிச்சலாக நின்று தம்பியை மீட்டான்.
आवारा कुत्ते से छोटे भाई को बचाने के लिए दूसरी मंजिल से कूद पड़ा बड़ा भाई! ❤️🙏
केरल के मलप्पुरम में एक दिल छू लेने वाला पल CCTV में कैद हुआ। आवारा कुत्ते ने छोटे बच्चे पर हमला किया तो उसकी चीख सुनकर बड़ा भाई तुरंत नीचे पहुंचा और बिना अपनी परवाह किए उसे बचाने के लिए कुत्ते के… pic.twitter.com/JWARobfzyZ— SUNIL YADAV 2.0 (@SUNILYADAV2027) August 12, 2026
தன் தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் காட்டிய இந்த அசாத்திய தைரியமும் பாசமும் சமூக வலைத்தளங்களில் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளதுடன், பெரும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. ஆபத்து என்று வந்தவுடன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்காமல், தன் தம்பிக்காக எதையும் செய்யும் இந்த அண்ணனின் பாசத்தை நெட்டிசன்கள் பலரும் சிலாகித்துப் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
