CINEMA
வாழை படத்தின் வெற்றி…. வீட்டிற்கே வந்த திருமாவளவன்…. தடபுடல் காட்டிய மாரி செல்வராஜ்…!!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.
இந்த படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சுவையான வாழைப்பழத்தின் சுவையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அதன் தார்களை தூக்கிச் சுமக்கும் கூலிகளின் கசப்பான வாழ்க்கையை இயக்குனர் மாரி செல்வராஜின் ‘வாழை’ படம்பிடித்து காட்டியுள்ளது.
இந்நிலையில் வாழை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து திருமாவளவனை வீட்டுக்கு அழைத்து மாரி செல்வராஜ் விருந்தளித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கிய பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இப்படத்தை புகழ்ந்து, தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
https://twitter.com/i/status/1827382434641670437