ஹீரோவாக அறிமுகமாகும் Sandy மாஸ்டர்… 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோவாக அறிமுகமாகும் Sandy மாஸ்டர்… 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடந்த இயக்குனர்களில் ஒருவர் தான் சாண்டி மாஸ்டர்.

இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக மாறினார். இவர் தண்ணில கண்டம் மற்றும் கெத்து போன்ற திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

அதே சமயம் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடன இயக்குனராக இவர் பணியாற்றினார்.

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

தற்போது நேரம், பிரேம், கோல்டு போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் கடந்து சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்த படத்திற்கு கிப்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் நேற்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடினார். படக்குழுவினர் மற்றும் தனது மனைவியுடன் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in