ஒரு எபிசோடுக்கு ரூ.50,000… டான்ஸ் மாஸ்டர் Sandy-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு எபிசோடுக்கு ரூ.50,000… டான்ஸ் மாஸ்டர் Sandy-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் தான் சாண்டி. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் நடிகை காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் சாண்டி மாஸ்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு Dorathy Sylviaஎன்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.

Advertisement

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாண்டி மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது பிரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு நடனம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. பல துறைகளில் கலக்கி வரும் இவர் பெரிதாக விலை உயர்ந்த கார் மற்றும் பைக் எதுவும் வைத்திருக்கவில்லை. ஆனால் இவரின் சொத்து மதிப்பு சுமார் ஏழு கோடி வரை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in