சின்னத்திரை செய்தி வாசிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் கண்மணி சேகர்.
இவர் ஆரம்பத்தில் ஜெயா டிவியில் தான் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
நியூஸ் 18,காவேரி போன்ற பல தொலைக்காட்சிகளில் இவர் பணிபுரிந்து இருந்தாலும் தற்போது சன் டிவியில் செய்தி வாசித்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து கண்மணி செய்க திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்களும் தேன்நிலவு கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்மணி சேகர் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
எளிமையாக இவர்கள் வளைகாப்பு பங்ஷனை கொண்டாடி இருக்கின்றனர்.
அந்த புகைப்படங்களை கண்மணி சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் கேப்ஷனாக, உன் சிறு அழைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க