கேக் வெட்டி கோலாகலமாக நடைபெற்ற ‘பகாசுரன்’ சக்ஸஸ் மீட்… இயக்குனர் மோகன் ஜிக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அளித்த தயாரிப்பாளர்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

கேக் வெட்டி கோலாகலமாக நடைபெற்ற ‘பகாசுரன்’ சக்ஸஸ் மீட்… இயக்குனர் மோகன் ஜிக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அளித்த தயாரிப்பாளர்…

Published

on

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பகாசுரன்’. இத்திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன்பே அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவே அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisement

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்பொழுது ரிலீசான ‘பகாசுரன்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இத்திரைப்படத்தை ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்தனர். இந்நிலையில் படத்தின் வெற்றியை பட குழு தற்பொழுது பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. இந்த வெற்றியை அவர்கள் கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

Advertisement

மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் G க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார்.

இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். தற்பொழுது இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in