LATEST NEWS
சீரியல் நடிகை மகாலட்சுமியின் முன்னாள் கணவரின் மகனை பார்த்துள்ளீர்களா?… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் வாணி ராணி, செல்லம்மா மற்றும் உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் அணில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை மறுமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணம் பல சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் தந்தை புகைப்படங்களை வெளியிட்டனர்.
அதன்படி சீரியல் நடிகை மகாலட்சுமி தனது முதல் மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
