நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை சஹானா… வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை சஹானா… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் சஹானா ஷெட்டி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அந்த சீரியலில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

சன் டிவியில் மட்டுமல்லாமல் விஜய் டிவியிலும் பல சீரியல்களில் இவர் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகல் நிலவு மற்றும் அழகு என பல சீரியல்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நிஷா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மருத்துவர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சஹானா அடிக்கடி கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அண்மையில் சஹானா வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அதே சமயம் சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

Advertisement

தற்போது இவர் நிறைமாத வயிற்றுடன் கணவருடன் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து சஹானாவுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in