குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார் மகள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார் மகள்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் கிங் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது கே எஸ் ரவிக்குமார் தான்.

இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய நாட்டாமை,முத்து, நட்புக்காக, படையப்பா, சூரியவம்சம், வரலாறு மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார்.

Advertisement

குறிப்பாக சேரன் பாண்டியன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இயக்குனராக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

இவரின் இயக்கத்தில் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது என்று செய்தி வெளியானால் ரசிகர்கள் மிகவும் குஷி அடைந்து விடுவார்கள்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இப்படி பல புகழுக்குரிய இவர் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஜனனி என்ற ஒரு மகளும் உள்ளார்.

Advertisement

அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜனனி நேற்று தனது 35 ஆவது பிறந்த நாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in