திடீரென்று தளபதியை சந்தித்த பிரபல நடிகர்….. “வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த தரமான சம்பவம்”….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென்று தளபதியை சந்தித்த பிரபல நடிகர்….. “வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த தரமான சம்பவம்”….!!!!

Published

on

விஜய் நடிப்பில் உருவாகி வரும்’ வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஷாருக்கான் மற்றும் அட்லீ சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து  வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரித்து வருகின்றது.

மேலும் விஜய்க்கு ஜோடியாக இப்பொழுது ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பக் கதை அம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது எண்ணூரில் மீதி  படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷியாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும்’ ஜவான்’ படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வருவதால், ஷாருக்கானும்  அட்லியும் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, விஜய்யை  பார்த்து பேசி வந்துள்ளனர்.இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்களை அவர்கள் பேசியுள்ளனர்.

அண்மையில் தனது பிறந்தநாளன்று விஜய், ஷாருக்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் அட்லி. தற்போது நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பின் புகைப்படம் எப்போது வெளியாகும், என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றன. மேலும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in