விஜய்க்கு நடிகர் திலகம் கொடுத்த முதல் பரிசு.. என்னன்னு தெரியுமா..? அதுக்காகவே ஸ்பெஷலா கொடுத்திருக்காரு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு நடிகர் திலகம் கொடுத்த முதல் பரிசு.. என்னன்னு தெரியுமா..? அதுக்காகவே ஸ்பெஷலா கொடுத்திருக்காரு..!!

Published

on

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தன்னால் மக்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் தான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது தனது தந்தையிடம் என்னை ஹீரோவாக நடிக்க வைத்து சினிமா எடுங்கள் என கேட்டு வந்துள்ளார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என அவர் அறிவுரை கூறியுள்ளார். முதன் முதலாக விஜய் தனது அப்பா இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தார்.

Advertisement

இதனையடுத்து விஜய் நடித்த செந்தூரப்பாண்டி, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் விஜய்யின் மார்க்கெட்டை மேலும் அதிகரித்தது. கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தில் சிறு வயது விஜயகாந்த்தாக விஜய் நடித்துள்ளார்.

விஜயின் நடிப்பை பாராட்டி நடிகர் திலகம் சிவாஜி அவருக்கு 500 ரூபாய் பணத்தை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதனையடுத்து ஒன்ஸ்மோர் படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து விஜய் நடித்த போது உன் பையன் நல்லா நடிக்கிறான் டா என சிவாஜி எஸ்.ஏ சந்திரசேகரிடம் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் நடிகர் திலகத்திடம் பரிசு வாங்கியதும், அவருடன் இணைந்து நடித்ததும் தன்னால் மறக்கவே முடியாது என விஜய் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Continue Reading
Advertisement