எம்.ஜி.ஆர், சிவாஜி யாரும் இல்ல.. திருமணத்திற்கு பிறகு சரோஜா தேவி நடிக்க அந்த நடிகர் தான் காரணமாம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்.ஜி.ஆர், சிவாஜி யாரும் இல்ல.. திருமணத்திற்கு பிறகு சரோஜா தேவி நடிக்க அந்த நடிகர் தான் காரணமாம்..!!

Published

on

நடிகை சரோஜாதேவி கடந்த 1955-ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை. ஆனால் தனது அம்மாவுக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்.

முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்த ஒரு படத்தின் மட்டும் நடித்து விடு என அம்மா கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்று ஒரு படத்தில் நடித்த சரோஜாதேவி பெங்களூர் சென்ற பள்ளி படிப்பை தொடர முடிவு செய்தார். ஆனால் இயக்குனர் கே.சுப்பிரமணியம் கன்னடத்தில் தான் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவியை நடிக்க வைக்க வேண்டும் என விருப்பப்பட்டார்.

Advertisement

இதனால் அந்த படத்தில் நடித்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. கடந்த 1967-ஆம் ஆண்டு சரோஜாதேவி ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சரோஜாதேவிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனாலும் நடிகர் திலீப் குமார் ஒரு நிகழ்ச்சியில் சரோஜாதேவியின் கணவரை சந்தித்து சரோஜாதேவி நல்ல நடிகை.

அவரை நடிக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள் என கூறியுள்ளாராம். அதற்கு சரோஜாதேவியின் கணவரும் உன் திறமையை நீ வீணாக்க வேண்டாம் நீ சினிமாவில் நடி என அனுமதி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சரோஜாதேவி நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக தடம் பதித்தது குறிப்பிடதக்கதாகும்.

Advertisement

Continue Reading
Advertisement