LATEST NEWS
குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாடு சுற்றுலா சென்ற சூர்யா – ஜோதிகா தம்பதி… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா.
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள்.
திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.
அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் மலையாள மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா தனது கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.
இதனிடையே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.
வரலாற்று கதை அம்சத்தில் இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூர்யா பல கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு தனது மகன் மற்றும் மகளுடன் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
