“பேரன் பட்டமளிப்பு விழா.. இன்பநிதிக்காக மு.க.ஸ்டாலின் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. லண்டனில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பேரன் பட்டமளிப்பு விழா.. இன்பநிதிக்காக மு.க.ஸ்டாலின் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. லண்டனில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்”..!!

Published

on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான தனது உயர் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணமான அவரது பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கடந்த 4-ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ள அவர், பேரனின் பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் 18-ஆம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது, பட்டமளிப்பு மேடையில் தனது பேரன் இன்பநிதியை மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தாத்தா-பேரன் இடையேயான இந்த அன்பான புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், தந்தை உதயநிதி ஸ்டாலினும் தனது மகன் இன்பநிதியைக் கட்டியணைத்து நெகிழ்ச்சியோடு வாழ்த்திய புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in