LATEST NEWS
ஹீரோவாக களமிறங்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ்… ஹீரோயின் இந்த நடிகையா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதல் முதலில் அறிமுகமானார் புகழ். பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதை எடுத்து அவர் அஜித்தின் ‘வலிமை’, அருண் விஜயின் ‘யானை’ உள்ளிட்ட படங்களிள் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவருக்கு சமீபத்தில் பென்சி என்பருடன் திருமணம் முடிந்தது. நடிகர் புகழ், `வலிமை’, `எதற்கும் துணிந்தவன்’, `டி.எஸ்.பி’, `யானை’, `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தற்போது `துடிக்கிறது மீசை’ என்ற படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.
இதில் வர்ஷினி, அக்ஷதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முருகதாஸ், மாறன், யோகிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எம்.ஜே.இளன் டைரக்டு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram