CRIME
“காரில் இருந்து இறங்கி வந்து..” ஜிம்மில் இருந்து திரும்பிய வாலிபருக்கு நேர்ந்த கதி.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிட்கோ, பஜ்ரங் சௌக் அருகே உள்ள பிரதான சாலையில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தேவேஷ் என்ற பண்டி தீட்சித் என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பவன் பராஷர் என்பவர் தனது காரால் தீட்சித்தின் ஸ்கூட்டர் மீது வேண்டுமென்றே மோதியதில், அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன்பின்னர் காரில் இருந்து இறங்கிய பராஷர், தான் மறைத்து வைத்திருந்த ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பியால் தீட்சித்தின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தீட்சித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளியான பராஷர் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் தானாகவே முன்வந்து சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீட்சித்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார், ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பியைப் பறிமுதல் செய்தனர். பராஷருக்கும் தீட்சித்துக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் இருந்து வந்ததே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கொலைக்கான முழுமையான நோக்கம் குறித்து போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பராஷர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
