CRIME
“இனிமே நீ உயிரோட இருக்கக் கூடாது…” அண்டைவீட்டாருடன் சேர்ந்து கணவனை கொன்று இரும்புப் பெட்டியில் அடைத்த கொடூர மனைவி..! போலீஸாரை அதிர வைத்த பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ராய்பரேலி-உன்னாவ் நெடுஞ்சாலையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்புப் பெட்டி ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுத் திறந்தபோது, அதற்குள் இரத்தம் உறைந்த நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் கொல்லப்பட்டவர் சோனு என அடையாளம் காணப்பட்டார்.
இக்கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வெறும் 12 மணி நேரத்திற்குள் வழக்கைத் துப்பு துலக்கினர். உயிரிழந்த சோனுவின் மனைவியான நேஹா ராவத், கணவரின் மதுப்பழக்கம் மற்றும் தினசரி சண்டை சச்சரவுகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தனது கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, தனது அயல்வீட்டுக்காரரான ஜிதேந்திர சிங் என்பவருடன் சேர்ந்து இந்த கொடூரக் குற்றத்தைச் செய்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து சோனுவைத் தாக்கி, கம்பளியால் மூச்சுத்திணறடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலைச் சாவர்க்களிலும் கம்பளியிலும் சுற்றி இரும்புப் பெட்டிக்குள் அடைத்து, வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிறிய லோடர் வாகனம் மூலம் நெடுஞ்சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான மனைவியும் அவரது கூட்டாளிகளும் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
