LATEST NEWS
“8 மாத உழைப்பு வீணா போச்சு” அசுத்தம் பண்ணிட்டாங்க.. தனி ஆளாகச் சுத்தம் செய்த நதி மீண்டும் குப்பைக்காடானதால் மனமுடைந்த இளைஞர்… கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னார் ஆற்றை, சுரேந்திர சிங் சௌத்ரி என்ற பிட்டு தபாஹி என்ற இளைஞர் தனி ஆளாக 8 மாதங்கள் போராடி முழுமையாகச் சுத்தம் செய்தார். எந்தவொரு பெரிய இயந்திரங்களும் இன்றி தன் கைகளாலேயே டன் கணக்கிலான குப்பைகளை அவர் அள்ளிய வெற்றிக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகளவில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
https://www.instagram.com/reel/DebMKBWyGx5/?utm_source=ig_web_button_share_sheet
ஆனால், அவர் சுத்தம் செய்த சில வாரங்களிலேயே அந்த ஆற்றங்கரை மீண்டும் நெகிழிப் பைகள் மற்றும் பொதுமக்களின் குப்பைகளால் நிரம்பி வழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தான் கஷ்டப்பட்டு மீட்டெடுத்த நதி மீண்டும் மாசடைந்ததைக் கண்டு மனமுடைந்த பிட்டு தபாஹி, இதுகுறித்த வேதனையான காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், இந்த ஏமாற்றத்தால் அவர் தன் முயற்சியைக் கைவிடாமல், மீண்டும் அஜ்னார் நதியைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளார். நதிகளைப் பாதுகாப்பது தனிமனித கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் கூட்டு முயற்சியும் விழிப்புணர்வும் இருந்தால்தான் இத்தகைய மாசடைதலைத் தடுக்க முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
