LATEST NEWS
அதிர்ச்சி..! 14-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. “வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை” என உருக்கமான கடிதம் சிக்கியது..!!
சென்னை போரூர் அருகே உள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 16 வயது மாணவர் ஜெய்கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மாணவர் ஜெய்கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போரூர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று, அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது மாணவர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு உருக்கமான கடிதமும் காவல் துறையினருக்குச் சிக்கியுள்ளது. அந்த விவகாரம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இந்தத் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
