CRIME
“பழிவாங்க இப்படியா செய்வாங்க..?” பச்சிளம் குழந்தைக்கு பெற்ற தாயே செய்த கொடூரம்… மனைவி அனுப்பிய கொடூர வீடியோ… பதிலுக்கு கணவர் எடுத்த அதிரடி முடிவு.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
தன் முன்னாள் கணவரைப் பழிவாங்குவதற்காகவும், அவரிடமிருந்து கூடுதல் பணம் பறிப்பதற்காகவும் ஒரு தாய் தனது பச்சிளம் மகனையே கொடூரமாகத் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அந்தப் பெண் தனது குழந்தையைத் துன்புறுத்தி, அந்த வேதனையான காட்சிகளைத் தனது முன்னாள் கணவருக்கு அனுப்பி அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளார். பெற்ற தாயே தன் குழந்தைக்கு இழைத்த இந்த கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூர வீடியோவை மாஜி கணவர் பெற்றவுடன், அதனை சும்மா விட்டுவிடாமல் அந்தப் பெண்ணின் அடையாள அட்டை புகைப்படத்துடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். முன்னாள் மனைவியின் இந்த வெறிச்செயலை உலகிற்கு அம்பலப்படுத்த அவர் இவ்வாறு செய்தாலும், ஒரு சிறு குழந்தை கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ மற்றும் தனிநபர் அடையாளங்கள் இணையத்தில் வேகமாகப் பரவியது பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
