CRIME
நள்ளிரவில் பயங்கரம்..! “என் பிள்ளை வேணுமா உனக்கு..? காதலுக்கு முட்டுக்கட்டை போட்ட காதலியின் தந்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை…!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூனம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஈஸ்வரன் (48) என்பவரின் மகள் ஆர்த்தியும், சித்தாலம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தமிழழகனும் (34) காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் தமிழழகன் காதலியின் வீட்டின் ஜன்னல் வழியாகச் செல்போன் வெளிச்சம் அடித்துப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி பாலகுரு ஆகியோர், தமிழழகனின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில், ஈஸ்வரன் தான் கொண்டு வந்த அரிவாளால் தமிழழகனின் தலையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழழகன், அந்த அரிவாளைப் பிடுங்கி ஈஸ்வரனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஈஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
