LATEST NEWS
BREAKING: நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சவரனுக்கு ரூ.560 வரை அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை.. உடனே கிளம்புங்க…!!
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென சரிவைச் சந்தித்துள்ளது பொதுமக்களுக்கும் நகை பிரியர்களுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 என்ற அளவில் சரிந்து ரூ.1,06,400-க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்கத்தில் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது சந்தையில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ள அதே வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாளின் விலையிலேயே நீடிக்கும் வெள்ளி, இன்று ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் எவ்வித ஏற்ற இறக்கமுமின்றி நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகளாவிய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டுச் சூழல்களுக்கு மத்தியில் தங்கம் விலை சரிந்திருந்தாலும், வெள்ளியின் மதிப்பு சற்றும் குறையாமல் முந்தைய நிலையிலேயே நீடிக்கிறது.
