CRIME
“உச்சகட்ட அவலம்… கணவன் வயிற்றைக் கிழித்துக் குடலை…” மாந்திரீக வெறியில் ஆடிய மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்துபோன போலீசார்.. கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில், விமலா தேவி என்ற பெண் மூடநம்பிக்கை மற்றும் மாந்தீரிக மோகத்தால் தனது கணவனின் வயிற்றைக் கிழித்துக் குடலை வெளியே எடுத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தத் தம்பதியருக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை. இதனால் விமலா தேவி தொடர்ந்து மாந்தீரிகர்களை நாடிச் சென்றதால், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு நாள் மாலை இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் சத்தத்தைக் கேட்டு, வீட்டு உரிமையாளர் மாடிக்குச் சென்று பார்த்தபோது, விமலா தேவி தனது கணவனின் குடலை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட பில்லி சூனிய நரபலியா அல்லது சண்டையின் போது நடந்த கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. உடற்கூறாய்வு (Post-mortem) அறிக்கையில், கணவனின் வயிற்றில் 35 சென்டிமீட்டர் நீளத்திற்குப் பயங்கரமான கீறல் ஏற்படுத்தப்பட்டு குடல்கள் வெளியே இழுக்கப்பட்டுள்ளதும், அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் சில பகுதிகள் காணாமல் போயுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து 3 கத்திகளை மீட்ட போலீசார், விமலா தேவியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
