CRIME
அடிப்பாவி..! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. காரை ஏற்றி கொலை செய்துவிட்டு போலீஸையே ஏமாற்ற முயன்ற மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!!
கர்நாடக மாநிலம் விஜயபுரா நகர் ஏக்தா நகரில் நிகழ்ந்த ஒரு படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜசேகர் பிதாதர் (42) என்பவருக்கும் அஸ்வினி (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இரட்டை மகன்கள் உள்ளனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர்கள் புதிய வீடு கட்டியபோது, வீட்டின் பெயிண்டிங் வேலைக்காக ஒப்பந்தக்காரரான கல்லூர் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளனர்.
வேலைக்காக கல்லூர் தினமும் வீடு வந்து சென்றதால், அஸ்வினிக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு தடையாக இருந்த ராஜசேகரை தீர்த்துக்கட்ட அவர்கள் இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த அக்டோபர் 4 அன்று ராஜசேகர் நடைபயிற்சிக்குச் சென்றபோது, அவர்கள் மீது காரை மோதி கொடூரமாக கொலை செய்தனர்.
கள்ளக்காதலை மறைக்க, தன் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அஸ்வினி நாடகமாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இருப்பினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் சந்தேகம் வலுக்கவே, அஸ்வினியிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மனைவியும் அவரது காதலன் கல்லூரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
