LATEST NEWS
“நான் தான் மாதா ராணி…” பைக் விலையைக் கேட்டதும் சாமியாடிய பெண்.. ஷோரூமில் அடுத்து நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ..!!
ஒரு பெண் தன் கணவருக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமிற்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு விசித்திரமான மற்றும் பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பைக்கின் விலை ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபாய் என்று ஷோரூம் விற்பனையாளர் கூறியதைக் கேட்ட உடனே, அந்தப் பெண் திடீரென விசித்திரமான சைகைகளைச் செய்துகொண்டு சத்தமாகக் கத்தத் தொடங்கியுள்ளார். இதனால் ஷோரூம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவிய நிலையில், அங்கு விரைந்து வந்த ஷோரூம் உரிமையாளர் அப்பெண்ணின் விசித்திர நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “இவருக்கு ஏதேனும் வலிப்பு வந்துவிட்டதா?” என்று அவரது கணவரிடம் கேட்டுள்ளார்.
அதற்குக் பதிலளிக்கும் விதமாக அந்தப் பெண், தான் ‘மாதா ராணி’ என்று கூறிக்கொண்டு ஷோரூம் உரிமையாளரை மிரட்டத் தொடங்கியுள்ளார். இந்த பைக்கிற்கு அதிகப் பணம் கேட்டுத் தனது பக்தர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய அவர், உடனடியாக விலையை பத்தாயிரம் ரூபாய் குறைத்து ஒரு லட்சத்திற்குத் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் தனது கோபத்திலிருந்து ஷோரூமைக் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்துள்ளார். எனினும், ஆன்மீகக் கோதாவில் இறங்கி அப்பெண் விடுத்த இத்தகைய மிரட்டல்களுக்குப் பிறகும், ஷோரூம் உரிமையாளர் பைக்கின் விலையைச் சிறிதளவுகூடக் குறைக்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
