எவ்வளவு தைரியம்..? “உடனே மன்னிப்பு கேளுங்க” அந்த ரகசிய உடைத்த ஜெலென்ஸ்கி.. உச்சகட்ட கோபத்தில் தென் கொரியா.. பரபரப்பில் உலக நாடுகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எவ்வளவு தைரியம்..? “உடனே மன்னிப்பு கேளுங்க” அந்த ரகசிய உடைத்த ஜெலென்ஸ்கி.. உச்சகட்ட கோபத்தில் தென் கொரியா.. பரபரப்பில் உலக நாடுகள்..!!

Published

on

உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டு ரகசியத்தை உடைத்ததாகக் கூறி, தென் கொரியா கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், இந்த விவகாரத்தில் உக்ரைன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ரஷியாவுக்கு எதிரான போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இரண்டு வட கொரியப் போர்க் கைதிகளை உக்ரைன் அரசு தென் கொரியாவிடம் சமீபத்தில் ஒப்படைத்தது. கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருதி, இந்த விவகாரத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த ரகசியக் காப்பு ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இந்தத் தகவலைப் பகிரங்கமாக அறிவித்தார். இதுமட்டுமின்றி, தென் கொரியாவுடன் அப்படி எந்தவொரு ரகசிய உடன்பாடும் செய்யப்படவில்லை என்று உக்ரைன் பின்னர் மறுத்துப் பேசியுள்ளது. உக்ரைனின் இந்தத் தன்னிச்சையான மற்றும் முரண்பாடான செயலானது இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதாகத் தென் கொரியா சாடியுள்ளது.

Advertisement

இதுகுறித்து தென் கொரியாவின் மக்கள் தொடர்புச் செயலாளர் சோங் கி ஹாங் வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் ஒப்பந்தத்தை மீறிப் பொய் கூறுவதை அதிபர் அலுவலகம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வ விளக்கமும், மன்னிப்பும் அளிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எனினும், சியோலில் உள்ள உக்ரைன் தூதரகம் இதுகுறித்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன் பின்னணி என்னவென்றால், கடந்த 2025-ம் ஆண்டு ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் நடந்த போரின்போது இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் ராணுவம் சிறைபிடித்தது. ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா களம் இறங்கிய பிறகு உயிருடன் பிடிபட்ட முதல் வீரர்கள் இவர்கள்தான். அவர்கள் தென் கொரியாவுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த இடமாற்றம் நடைபெற்றது. தற்போது வட கொரியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க தென் கொரியா முயன்று வரும் வேளையில், இந்த ரகசியம் உடைந்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in