பகீர்..! கண்ணுக்குள் நெளிந்த 11 உயிருள்ள புழுக்கள்…கண்புரை ஆபரேஷன் செய்யப்போன முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வினோத மருத்துவ அதிசயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! கண்ணுக்குள் நெளிந்த 11 உயிருள்ள புழுக்கள்…கண்புரை ஆபரேஷன் செய்யப்போன முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வினோத மருத்துவ அதிசயம்..!!

Published

on

தென் கொரியாவின் சுஞ்சியோன் நகரைச் சேர்ந்த 71 வயது விவசாயி ஒருவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடந்த 2 மாதங்களாகக் கண்கள் சிவந்து போதல், மங்கலான பார்வை மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த முதியவர், அது கண்புரை பாதிப்பு என நினைத்துக் காங்வோன் தேசிய பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது கண்களில் 11 முதல் 22 மி.மீ நீளமுள்ள 11 ‘தெலாசியா காலிபேடா’ வகை புழுக்கள் இருப்பது கண்டறிந்து நுண்துறடு கருவி மூலம் அகற்றப்பட்டது.

Advertisement

அகற்றப்பட்ட சில பெண் புழுக்கள் கர்ப்பமாக இருந்ததும், விலங்குகளின் கண்ணீரை உண்ணும் ஈக்கள் மூலமாக முதியவர் திறந்தவெளியில் வேலை செய்யும்போது இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது புழுக்கள் முற்றிலும் அகற்றப்பட்டு அவர் நலமடைந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in