LATEST NEWS
“5-வது குழந்தை வேணுமா?” வாசக்டமி பண்ணிடுவேன்…அமெரிக்கத் துணை அதிபரை மிரட்டிய இந்திய வம்சாவளி மனைவி உஷா…!!
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷாவிடம் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என விளையாட்டாகக் கூறியதும், அதற்கு உஷா அளித்த நகைச்சுவையான மிரட்டலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நான்கு குழந்தைகளைக் கொண்டுள்ள இத்தம்பதியினர், தற்போது 3 மாதக் குழந்தையான அலெக்கை கவனித்து வருகின்றனர்.
இச்சூழலில் வான்ஸ் மீண்டும் குழந்தை பற்றிப் பேசியதால், தன்னைத் தொந்தரவு செய்தால் ட்விட்டரில் அவருக்கு ‘வாசக்டமி’ செய்யப்போவதாக அறிவித்து விடுவேன் என்று உஷா எச்சரித்ததாக வான்ஸ் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளார்.
அரசியல் கடமைகளுக்கு அப்பால் இவர்களது இந்த எதார்த்தமான குடும்ப உரையாடல் இணையவாசிகளால் ரசிக்கப்பட்டு வரும் அதேவேளை, குழந்தை வளர்ப்பு மற்றும் தற்காலப் பொருளாதாரச் சூழல் குறித்த விவாதங்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.
